பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் இராட்சத கொடிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வுகள் தொடர்பான விசேட அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

அந்த ஆய்வின் மூலம், அண்டார்டிகாவில் தண்ணீருக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் பூமியின் வலப்பக்கத்தில் உள்ள கடலில் இராட்சத சுனாமி ஏற்படலாம் என மேலும் தெரிய வந்துள்ளது.

அதன் அளவைப் பற்றி சரியான குறிப்பு இல்லை என்றாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சுனாமி ஏற்பட்டது என்பதற்கான சான்றுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகளின்படி, இந்த சுனாமி அலைகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து முதல் தென்கிழக்கு ஆசியா வரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டுள்ளன.

சுனாமி எச்சரிக்கைகளை அடையாளம் காணும் தொழிநுட்பம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மேலதிக எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version