போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (24) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இந்த அறிவித்தலை விடுத்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குறித்த போதகருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Share.
Exit mobile version