லங்கா ச.தொ.ச.வில் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று தொடக்கம் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது

தற்போதைக்கு 1080 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 400 கிராம் பால் மா பைக்கற் ஒன்றிற்கு 50 ரூபா விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 1030 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது

செத்தல் மிளகாய் விலை 45 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 1350 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அத்துடன் சோயாமீட், சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வௌ்ளைச்சீனி ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது

அதற்கேற்ப பருப்பு ஒரு கிலோ 325 ரூபா, சோயாமீட் 660 ரூபா, பெரிய வெங்காயம் 129 ரூபா, வௌ்ளை சீனி 139 ரூபா என்றவாறு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version