அவசியமான மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மதுவரி மற்றும் புகையிலை வரிச் சட்டங்களின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான பல உத்தரவுகள் மீதான விவாதத்தில் நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 அல்லது 5 வருடங்களுக்கு முழுமையாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Share.
Exit mobile version