கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல வகையான மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கத்தரிக்காய், கரட், முள்ளங்கி, தக்காளி ஆகியவற்றின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறிகளின் மொத்த விலையில் சிறிது குறைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சில்லரை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்

மழை குறைந்துள்ளதால் சந்தைக்கான மரக்கறிகள் மீண்டும் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

அனைத்து வகை மரக்கறி விதைகளும் விலை கட்டுப்பாட்டின்றி நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதால்,

மலையக மரக்கறிகளின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version