நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி ; நேற்று 297.32 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 297.31 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 314.29 ரூபாவிலிருந்து 313.30 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி : நேற்று 298.90 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 298.18 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 310 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி : நேற்று 300 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 299 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 311 ரூபாவாக குறைந்துள்ளது.