அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றா நோய் பிரிவும், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.

“தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 73 வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

ஐ.டி.எச் வைத்தியசாலை அல்லது தொற்று நோய்த் திணைக்களம், தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஒவ்வொரு நாளும் அவதானிக்கப்படுகின்றது.

தற்போது, ​​400 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் முழு நாட்டையும் உள்ளடக்கி தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் தொற்று நோய்கள் நிறுவகம் ஆகியவற்றினால் பயிற்சியளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளனர். இப்போது அந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவசர நிலையை கையாளும் வகையில் தயாராகி வருகின்றனர்.

Share.
Exit mobile version