ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் நாளை (23ம் திகதி) ஈடுபடவுள்ளனர்.

நிறைவேற்று தர சேவையான இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்கி அரச ரீதியிலான சேவைகளுக்கு மாத்திரம் பொருந்தக்கூடிய தடங்கலற்ற பதவி உயர்வு முறையை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பித்தல்.

ஆசிரியர் சேவையின் சம்பள அதிகரிப்பு மூலம் ஏற்பட்ட சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் அதுவரை ஆசிரியர் கல்வியியலார் சேவையினருக்கு முப்பதாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பித்தல், சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தல், கல்லூரிகளில் இருக்க வேண்டிய கல்வி சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் 3/2023 என்ற சுற்றறிக்கையை ரத்து செய்தல் முதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்குள் இந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு பதிலளிக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரிய கல்வியியலாளது சங்கம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளின் தங்குமிடங்கள் மற்றும் இதர வசதிகள் முறையாக வழங்கப்படும் வரை, புதிய ஆட்சேர்ப்புகளில் இருந்து விலகி இருக்க போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Share.
Exit mobile version