2023 மே 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த காலக் கட்டத்தில் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினை எட்டியுள்ளது.

அதன்படி, 2023 மே 19 வரையான காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1% ஆகவும், ஸ்டெர்லிங் பவுண்டுடன் ஒப்பிடும்போது 15.4% ஆகவும், யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5% ஆகவும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7% ஆகவும் உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version