கம்பஹா மாவட்டத்தில் வாரத்திற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம் அதிகம் உள்ள 39 பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார்.
இந்த வருடத்தில் இதுவரை 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் 0.4% டெங்கு நுளம்பு புழுக்கள் காணப்படுவதாகவும், அரச நிறுவனங்களில் 0.6% டெங்கு நுளம்புகள் காணப்படுவதாகவும் அந்த இடங்களை துப்பரவு செய்வது மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டுமென சமூக வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி மேலும் தெரிவித்தார்.