இந்த ஆண்டு மே மாதம் வரை 2726 இலங்கை தொழிலாளர்கள் தென் கொரிய வேலை வாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வேலை ஒப்பந்தங்களின்படி, 2694 இளைஞர்களும் 32 யுவதிகளும் உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் கொரிய வேலைகளுக்கு சுமார் 8000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அந்நாட்டு மனிதவளத் துறை ஒப்புக்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நிலவரப்படி தற்போது நடைபெற்றுவரும் கொரிய மொழி தேர்வுக்கு 84886 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.