சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்புளுவென்சா வைரஸ் தொற்று கொரோனா தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version