சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு போதுமானதாக அமையாது என்று சுட்டிக்காட்டியுள்ள NCASL, அரசாங்கம் சீமெந்து மூட்டையின் விலையினை 1800 ரூபாவாகக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள NCASL இன் தலைவர் சுசந்த லியனாராச்சி,

டொலரின் பெறுமதி ஓரளவுக்குக் குறைந்துள்ள வேளையில் மக்களின் நலனுக்காகக் குறிப்பாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கம் சீமெந்து மூட்டையின் விலையைக் குறைக்க வேண்டும்.

தற்போது சந்தையில் சீமெந்து விலை அதிகரிப்பினை தாங்க முடியாததால் 55 சதவீத அரசு மற்றும் தனியார் துறை கட்டுமானங்கள் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், எனவே இந்த தொகையை விட குறைந்த பட்சம் 1800 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலைக்கு சீமெந்து மூடையை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Share.
Exit mobile version