நேற்றைய (19) தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபர அறிக்கை இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, நேற்று 299.21 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 300.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நேற்று 312.17 ரூபாவாக காணப்பட்ட டொலரின் விற்பனை பெறுமதியும் இன்று 314.08 ரூபாவாக அதிகரித்துள்ளது.