கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள “Pick-me” மற்றும் “Uber” டாக்ஸி சேவைகள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சங்கங்களின் சாரதிகள் இன்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்ளே மூன்று டாக்ஸி சங்கங்களின் கீழ் சுமார் 1,400 பதிவு செய்யப்பட்ட டாக்சிகள் உள்ளன.
இந்த சங்கங்கள் 1980 ஆம் ஆண்டு முதல் கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன.
தற்போது, இந்த டாக்சிகளுக்கு மேலதிகமாக பல தனியார் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் இலங்கை போக்குவரத்து சபை பல நீண்ட தூர சேவை பேருந்துகளும் அம்பாறை, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களுக்கும் மற்றும் கொழும்புக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட டாக்ஸி சாரதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பயணம் என்ற நிலை உருவாகியுள்ளது.