மீரிகம கல்லெலிய பிரதேசத்தில் கேக் உற்பத்திக்கு பழம் பதப்படுத்தும் ஒரு நிறுவனத்தில் காலாவதியானது மற்றும் கரையான்கள் கொண்ட ஒரு தொகை பேரீச்சம் பழங்களை சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைத்திருந்த போது இன்று (18) விசேட புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் சோதனை நடத்தப்பட்டது.
கம்பஹா நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது, உற்பத்திப் பணிகள் இடம்பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
காலாவதியான மற்றும் புழு தாக்கிய சுமார் 750 கிலோ கொண்ட பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலையில் கண்டுபிடித்துள்ளனர்
இங்கு தயாரிக்கப்படும் பழங்கள் கேக் தயாரிப்பதற்காக கல்முனை பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததுடன், தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்து பிணையில் விடுவித்ததுடன், உரிமையாளரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.