உளவியல் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக விரைவில் இயற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கையில் ஆயுதம் இல்லாவிட்டாலும் மனம் எனும் ஆயுதம் ஏந்தியவர்களை தடுக்கவும், சமூகத்திற்கு தீங்கான செயல்களை செய்வதை தடுக்கவும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாட்டின் சட்டத்தை பாதுகாக்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவித்த அவர், பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே அரசாங்கம் உரிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
மத முரண்பாடுகளை உருவாக்கி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஜனாதிபதி கட்டுப்படுத்தி வருவதாகவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.