அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 312.37 ரூபாய் ஆகவும் பதிலாகி உள்ளது.

சுமார் 13 மாதங்களுக்குப்பிறகு இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தங்கத்தின் விலையிலும் சற்று வீழ்ச்சி ஏற்படுள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 168,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 154,000 ஆகவும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version