தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், காரில் வந்த இருவர் தங்கச் சங்கிலி பறிக்க முற்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் குறித்த யுவதி நடைப் பயிற்சி செய்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் டாக்ஸி ஓட்டுனர் சக்திவேலைக் கைது செய்த பொலிஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் காரில் சென்று தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியரான அபிசேக் என்பவரையும் மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் கொள்ளை முயற்சி குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இருவரும் வழுக்கி விழுந்ததால் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல், அபிசேக் ஆகிய இருவரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சி இல்லையென்றால் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருக்க முடியாது என்று குறிப்பிட்ட பொலிஸார், மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிசிடிவி பொறுத்துவது கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், கொள்ளையர்களை அடையாளம் காணவும் உதவும் என்றும் சுட்டிக்காட்டினர்.

Share.
Exit mobile version