இந்திய மருந்துப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து இழப்பீடு கோரும் நோயாளிகள் பற்றிய பிரத்தியேக அறிக்கையைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு கேள்விக்குரிய மருந்தை தயாரித்த இந்திய நிறுவனமான இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

“நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை, இதனை அல்விதா பார்மாவுக்கும் தெரிவித்துள்ளோம்,” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சில சமயங்களில் தரமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. உலக அளவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

“விநியோகஸ்த்தர் கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறார், மேலும் இது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இண்டியானா ஆப்தால்மிக்ஸ் இந்தியாவில் கண் சொட்டு மருந்து மற்றும் கண் களிம்புகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், அதே சமயம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட அல்விதா பார்மா, ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு மருந்து தயாரிப்புகளின் மேம்பாடு, பதிவு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும். ,

மே 12 அன்று, மூன்று அரசு மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ‘ப்ரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் சிக்கல்களை உருவாக்கிய பல நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 30 நோயாளிகள் கண் சிக்கல்களுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மருந்து தொகுதி முழுவதும் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. ‘பர்க்ஹோல்டேரியா செபாசியா’ என்ற பாக்டீரியா இந்த சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Share.
Exit mobile version