5000 முச்சக்கர வண்டிகளை – 5 வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் – மாற்றும் திட்டம் நேற்று (11)ஆம் திகதி பிலியந்தலையில் உள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கு நிலைபேறுமிக்கதும் நெகிழ்ச்சியாதுமான எதிா் காலத்துக்காக ஏனைய உலக நாடுகளைப் போல இலங்கையும் பசுமையானதும் துாய்மையானதுமான அனுகுமுறைகளை கடைபிடிப்பதற்கான செயற்பாடுகளை முன்நெடுத்து வருகின்றது.

நாட்டில் நிலவும் சமூக பொருளாதார நெடுக்கடிகளுக்கு மத்தியில் நிலைபேறு மிக்க இயக்க அனுகுமுறைகளை பின்பற்றுவதற்கு தம்மை மாற்றிக் கொள்வதை பசுமை மீட்பு செயற்பாட்டினை அடையாளம் காணப்பட்டது.

இலங்கைக்குள் குறைந்தளவு கார்பன் வெளியீடு அவைகளுடன் உள்ளடக்கு தன்மை மற்றும சமத்துவமான அபிவிருத்திக்கான பாதை சீராக்கப்பட்டு மேம்படுத்துவதற்காக ஒரு வழிமுறை பெற்றோல் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டமானது முன்னோடி கட்டம் செயல்விள்க்க கட்டம் மற்றும் வரைவுபடுத்தப்பட்ட கட்டம் என மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது.

இதில் முதலாவது திட்டத்தினை இச் சேவைக்கு மாற்றுவதை பரிசோதித்துப் பாா்க்கும் செயல் மிக்க கட்டமானது மாற்றத்திற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மாற்றத்திற்கு அவசியமான சந்தை சக்திகளை பயன்படுத்தும்.

இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திடடத்தின் வதிவிடப் பிரநிதி அசுசா குபோடா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவும் கலந்து கொண்டனர்.

முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் புறக்கோட்டை, மாகும்புர கொட்டாவைப்பிரதேசத்தில் 200 முச்சக்கர வண்டி மின்சார இயக்கத்திற்கு மாற்றப்பட உள்ளது.
இத்திட்டத்தினை இலங்கை அரசுக்கு இலவசமாக ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டம் நிதி உதவி வழங்கியுள்ளது.இவ் இயக்கத்தில் மாற்றிய பின்னர் முச்சக்கர வண்டிகள் முற்றிலும் கட்டணங்கள் குறைக்கப்படும்.

10 வருடங்களுக்குற்பட்ட உற்பத்தி முச்சக்கர வண்டியாக இருத்தல் வேண்டும். 4 ஸ்ரோக் கியர் கொண்டதாகவும்.

தமது குடும்பத்தினை வருமானத்திற்காக முச்சக்கர வண்டியை தொழிலாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும் ஊனமுற்றோர் , பெண்கள் முச்சக்கர வண்டி உரிமையளாராக இருப்பின் அவ்வாறவனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதனுடாக உள்நாட்டு பொருளாதாரத்திற்கு மிக அவசியமான பணத்தை சேர்ப்பதற்காக சிறியலவிலான முறைசாரத்துறை பொருளாதார செயற்படுத்தலை மறுமலர்ச்சிக்கு வித்திடவே ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இதனை இலங்கைக்கு உதவித் திட்டமாக செயல்படுத்துவதாக ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரநிதி அசுசா குபோடா தெரவித்தார்.

Share.
Exit mobile version