தமிழ்நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் இன்று (22) கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகக் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவி பொருட்கள் 4 மில்லியன் குடும்பங்களுக்கு நாடளாவிய ரீதியில் விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்த விநியோக நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

முதற்கட்டமாக கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இந்த உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலும் இந்த உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

இந்த உதவி பொருட்களில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 25 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

குறித்த கப்பல் கடந்த புதன்கிழமை (18) தமிழ்நாட்டிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version