பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண் மாணவியரை பாதுகாத்துக் கொள்வது குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த, கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு சுமார் 436 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 68 சிறுவர் துஷ்பிரயோகம் செய்தவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்களை தெரியாத நபர்களுடன் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டிய பெற்றோர்களின் கவனக்குறைவால் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பல ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இப்பாறான துஷ்பிரயோகம் தொடர்பாக கிட்டத்தட்ட 2,809 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவாகியுள்ளன.

Share.
Exit mobile version