அரச நிறுவனங்களிலேயே அதிக நட்டத்தைச் செலுத்தும் இலங்கை விமான நிறுவனத்தின் (srilankan airline) அபிவிருத்திக்காக முதலீட்டாளர் (மறுசீரமைப்பு) வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனமான லஸார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களின் ஆலோசனை அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வினவிய போது, ​​லஸார்ட் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் தரைவழிச் செயற்பாடுகள் ஒரு முதலீட்டாளருக்கு ஒன்றாக வழங்கப்படுமா அல்லது தனித்தனியாக வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனவும், கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

லஸார்ட் ஆலோசனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து விமானங்கள் வருவதால், மத்தள விமான நிலையம் ஓரளவு வளர்ச்சி கண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Share.
Exit mobile version