பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.

பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதற்கு பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாதுக்க பிரதேசத்தில் நேற்று(13.05.2023) நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதனால் டெங்கு அபாயத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version