கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தங்காலை – ஹம்பாந்தோட்டை வீதியின் கொடிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

லொறி ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியின் 6 ஆவது ஒழுங்கைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீப்பே – இங்கிரிய வீதியின் பிட்டும்பே பகுதியில் அம்பியூலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் 32 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பியூலன்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நிவித்திகல – கலவான வீதியில் பஸ் ஒன்றில் மோதி 73 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் போஅத்த பகுதியில் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு வாகனமொன்று தப்பிச் சென்றுள்ளது. விபத்தில் காயமடைந்த பாதசாரி, வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version