பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் Monkeypox எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக்கத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு  மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான இரசாயனப் பொருள்கள் எதிர்வரும் வாரங்களில் கிடைக்கவுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காய்ச்சலானது, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version