மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதென பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன கூறியுள்ளார். 

சில பகுதிகளில் 50 பீடா அலகுகளிலும் ஏனைய பகுதிகளில் 20 பீடா அலகுகளிலும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நோய்கள் பரவாதிருக்க நுளம்பு குடம்பிகள் 05 பீடா அளவில் காணப்பட வேண்டும் என பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

மட்டக்களப்பு, மாத்தளை, கண்டி, காலி உள்ளிட்ட பகுதிகளிலும்  நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் இலக்கு உரிய முறையில் எட்டப்படவில்லை என பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கின்றார். 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். 

டெங்குவை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளதென வலியுறுத்தும் சுகாதார தரப்பினர் சுற்றுச் சூழலை சுத்தமாக பேணுவதனூடாக டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Exit mobile version