வரி விதிப்புகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்கு பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்காலத்தில் வரிவிகிதங்களை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையொன்று நேற்று சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஒருகுடவத்தை சுங்க முனையத்திற்கு விஜயம் செய்த போதே இதனைத் தெரிவித்தார்.

மொத்தம் 556,000 சிகரெட்டுகள் ஒரு இயந்திரம் போல போலியான ஒரு பேக்கில் அடைக்கப்பட்டிருந்தன. இதன் பெறுமதி சுமார் 85 மில்லியன் ரூபாவாகும் மற்றும் விதிக்கப்பட்டுள்ள வரித் தொகை சுமார் 70 மில்லியன் ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 4 ஜீப் வண்டிகள் மற்றும் கார் ஒன்றும் இராஜாங்க அமைச்சரினால் அவதானிக்கப்பட்டது.

அத்துடன், சுங்கத்திற்கு அறிவிக்காமல் இறக்குமதி செய்யப்பட்ட 18 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானம் மற்றும் கிருமிநாசினியாக இறக்குமதி செய்யப்பட்ட ஒயின் கையிருப்பும் அமைச்சரினால் பரிசோதிக்கப்பட்டது.

Share.
Exit mobile version