பொதுமக்களை எழுந்தமானத்திற்கு கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வராதீர்கள். ஒருவரை கைது செய்து வழக்கு தொடர்வதெனில் சரியான ஆதாரங்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என தொல்லியல் திணைக்களத்துக்கு வவுனியா நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சேதப்படுத்தி அடித்தளம் அமைத்தது, நீதிமன்ற உத்தரவுப்படி சேதமடைந்த சிலைகளை வைக்காமல் புதிய சிலை களை வைத்த குற்றச்சாட்டில் நெடுங்கேணி காவல்துறையினரால், ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர்கள் நேற்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வவுனியா நீதிமன்ற நீதிபதி, தொல்லியல் திணைக்களத்தினரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்.

யாரையும் சும்மா சும்மா கைது செய்து கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தாதீர்கள், ஒருவரை கைது செய்து வழக்கு தொடர்வதெனின் உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என கடிந்து கொணடத்துடன் கைதான நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

Share.
Exit mobile version