எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்தவொரு வங்கி ஊடாகவும் இந்த நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

சமுர்த்தி நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது பிரதேச செயலாளர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தி நிவாரணம் ‘ஏழ்மையானவர்கள்’ மற்றும் ‘மிகவும் ஏழ்மையானவர்கள்’ என்ற இரு பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது. மிகவும் ஏழ்மையானவர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவும் ஏழ்மையானவர்களுக்கு 8,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நடுத்தர அளவில் பாதிப்பிற்குள்ளானவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாவும் நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

Share.
Exit mobile version