எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் முயற்சியினால், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தமது வாழ்வதாரத்தை இழந்த 15,000 கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டிருந்த சுமார் 5,000 பேருக்கான நட்டஈடு இம்முறை வழங்கப்படவுள்ள நிலையில், இன்று 30 பேருக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளன.
ஏனையோருக்கு காசோலைகள், சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளன.