முட்டைகளின் விலைகள் கட்டுப்பாட்டு விலையைக் காட்டிலும் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி வெள்ளை முட்டை 40 ரூபாய் படியும், சிவப்பு முட்டை 41 ரூபாய் படியும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை சில்லறை அங்காடிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் 44-45 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version