அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று ( 21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இந்நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் பலர் கேன், பக்கெட், பீப்பாய்களுக்குள் எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாளைய தினம் நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனவும், நீர் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்து திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version