ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரியை புகையிரத சேவையில் நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(9) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று இரவு 12 மணி முதல், அனைத்து சேவைகளில் இருந்தும் விலக அனைத்து புகையிரத நிலைய அதிபர்களும் தீர்மானித்துள்ளனர்.

புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை நியமிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரி ரயில்வே அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்த போதும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் சங்கத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்ததாகவும் கசுன் சாமர தெரிவித்தார்.

Share.
Exit mobile version