2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் ஆராயப்படுவதாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து போட்டிகள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி, இந்திய வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்காமை போன்ற விடயங்கள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

இந்தியா இந்த போட்டிகளை டுபாயில் விளையாடுவதற்கு எதிர்பார்த்திருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேபோன்று ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு வெளியே போட்டியை நடத்துவதற்கான யோசனையை ஆதரித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இது குறித்த தீர்மானம் இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் தெரிவித்துள்ளது.

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரை நடத்துவதற்கு ஓமன் முன்வந்த போதிலும் நிபந்தனைகளுக்கு அமைய தற்போது இலங்கை ஒரு விருப்பமாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது.

Share.
Exit mobile version