கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை நீக்கப்பட்டமை மற்றும் வேறு சில செலவுகள் அதிகரிப்பு காரணமாக கோதுமை மா ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள இரு பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்ட 3 ரூபா சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.