“இது மிகவும் பாரதூரமான நிலை, சட்ட அமலாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது. இந்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குறிப்பாக இளம் பெண்களுடன் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம்.

துஷ்பிரயோகம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் என உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share.
Exit mobile version