ஸ்ரீலங்கன் விமான சேவையை இந்தியாவின் ‘டாடா நிறுவனத்திடம்’ ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுவான ‘டாடா நிறுவனம்’ ஏர் இந்தியா உட்பட பல விமான நிறுவனங்களின் வணிகத்தை நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இலங்கையில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதுடன், அந்த நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version