உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் இறுதி வாரத்தில் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கைக்காக இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தனது அவதானிப்புகளை உரிய தரப்பினருக்கு விரைவில் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை ஏப்ரல் 11ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆர்வமுள்ள தரப்பினருக்கு இடைக்கால அறிக்கை ஏப்ரல் 27ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் போது முன்மொழிவுகள் கவனத்திற்க் கொள்ளப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆக குறைக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டது.

Share.
Exit mobile version