07 கிலோ எடையுள்ள 15 கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரை சுங்க வளாகத்தை கடந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

43 வயதுடைய வர்த்தகரான இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று காலை (07) காலை 09.20 மணியளவில் Fly Dubai Airlines இன் F.Z.-547 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு சுங்கச்சாவடி வளாகத்தில் இருந்து வெளியே வந்து விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார்.

பயணி தனது இடுப்பில் 08 பொதிகளில் மறைத்து வைத்திருந்த 04 கிலோ 400 கிராம் எடையுடைய 42 தங்க பிஸ்கட் அரை தங்க பிஸ்கட் மற்றும் 02 கிலோ 600 கிராம் எடையுள்ள நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த தங்கம் மற்றும் அதனை சட்டவிரோதமாக கொண்டு வந்த பயணியை மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version