கட்டுநாயக்காவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் துப்பாக்கியால் தாமதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவில் இருந்து நேற்று பிற்பகல் இந்தியாவில் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர், தோட்டாக்களால் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தை வந்துள்ளார்.

இதன் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் அவர் எடுக்கப்பட்டமையினால் விமானம் புறப்பட 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு விமானத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரி விமானத்தை விட்டு வெளியேற விரும்பினால் அவர் துப்பாக்கியை விமானத்தின் தலைமை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியன் எயார்லைன்ஸின் AI-272 என்ற ஏர்லைன்ஸ் விமானத்தின் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய விமான பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கி இருப்பதை அவதானித்து அவரை தடுத்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

பின்னர் குறித்த இந்திய பாதுகாப்பு அதிகாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் இரு நாடு உயர் பாதுகாப்புத் தரப்பினர்களும், தூதரங்கங்களும் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று பிற்பகல் 01.35 மணி அளவில் சென்னை நோக்கி புறப்படவிருந்த விமானம் 05.35 மணி அளவில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version