இலங்கையில் இருந்து சட்டவிரோதமான படகின் மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த தமிழர்கள் 10 பேரை, மண்டபம் மெரைன் பொலிஸார் மீட்டுள்ளன. .

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே 1ம் எண் மணல் தீடையில் சனிக்கிழமை (06) வந்திறங்கிய இலங்கையைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரை மெரைன் பொலிஸார் மீட்டனர். இதில், 75 வயது மூதாட்டி ஒருவரும் அடங்குகின்றார்.

இவர்களை, மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கிருந்து இந்தியா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள், இலங்கை முல்லைத் தீவிலிருந்து மே 5ம் திகதி சட்டவிரோதமான படகில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு அரிச்சல்முனை மணல் தீடையில் இறக்கிவிடப்பட்டதாகவும், இதற்காக ரூ.1 இலட்சத்துக்கு 50 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம், மத்திய, மாநில உளவுப்பிரிவு பொலிஸாரும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

Share.
Exit mobile version