கோதுமை மாவுக்காக வழங்கப்பட்டுவந்த இறக்குமதி தீர்வை சலுகை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

15-16 ரூபாவாக இருந்த இந்த வரி கடந்த 2020 மார்ச் மாதத்துடன் 3 ரூபாவாக குறைக்கப்பட்டது.

இந்த வரியை மீண்டும் பழைய மட்டத்திலேயே அமுலாக்குமாறு நிதியமைச்சு சுங்கத் திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளது.

இதனால் நாட்டில் கோதுமை விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் 2019 டிசம்பரில், முன்னைய அரசாங்கம் கோதுமைக்கான கூட்டு வரியை 36 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக குறைத்ததன் விளைவாக அரசுக்கு பல பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version