இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இருதரப்பு கடன் வழங்குனர்களை ஒருங்கிணைத்து இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி சுஞ்சி சுட்டிக்காட்டுகிறார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 56 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கடன் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக வங்கி முறைமைக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version