(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் பெருவிழா நேற்று மாலை (5) மிக விமர்சையாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும், இக் கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி எம்.சி அலிவூட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக சம்மாந்துறை உதவிக் கல்விப் பணிப்பாளரும் இப் பாடசாலையின் பழைய மாணவரும்மான யூ.எல்.ரியால்,ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.றஹிம்.,ஓய்வு பெற்ற ஆசிரியர் யூ.எல்.எம்.அலி. ஆசிரியர் ஏ.எல்.பஸ்மின். பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தர்,எம்.ஏ சலாம்,உதவி அதிபர் இ.ரினோஸ், மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.எல் ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேலும் இவ்வருடம் முழுவதுமாக இரத்த தான முகாம்கள், பழைய மாணவர்களின் அணிகள் பங்குகொள்ளும் கிரிக்கட் சுற்றுப்போட்டி,உதைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,கலை, கலாச்சார நிகழ்வுகள், பிரமாண்ட பரிசளிப்பு, மேலங்கி அறிமுகம், சாதனையாளர் கௌரவிப்பு, பெண் பழைய மாணவிகளின் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




















Share.
Exit mobile version