வெசாக் பண்டிகையுடன் இணைந்து மாணவர்களுக்கு
அறநெறி (தம்ம) பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவது தொடர்பான அமைச்சரவை பாத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் பிரகாரம், அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு, அவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு வழிநடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தனிமனிதர்களிடையே பொறுமை, ஒழுக்கம், மதத்தின் மீது பற்று இல்லாமை போன்றவற்றால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து நல்வாழ்வு சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்துடன், அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அறிவுத்திறனும் விருத்தி செய்யப்படவுள்ளதுடன், பிரசங்கம், தியானம் உள்ளிட்ட தம்மால் புரிந்துணர்வை பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் வழங்கவுள்ளனர்.

பிள்ளைகள் அறநெறி பாடசாலைக் கல்வியிலிருந்து விலகிச் செல்வதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்திருந்தார்.

Share.
Exit mobile version