இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியிலுள்ள வளைவொன்றில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து இன்று (5) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியினூடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

Share.
Exit mobile version