நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை வெள்ளிக்கிழமை சித்திரா பெளர்ணமியன்று நடைபெறவுள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாகத் தெரியும்.
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் இருப்பவர்களால் பார்க்க முடியும்.
மேலும் பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் தெளிவாகப் பார்க்க முடியும்.
இந்த பகுதி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ஆம் திகதி அதிகாலை 01.01 மணிக்கு நிறைவடைகிறது