இந்தியாவின் பிரபல நடிகர் சரத் பாபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆரம்பத்தில் சரத்பாபுவின் உடல்நிலை சீராக இருந்தபோதிலும், பிற உடல்நலக் கோளாறுகளால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

சரத் ​​பாபுவின் இயற்பெயர் செரு சத்யம் பாபு தீட்சிதுலு என்பதாகும்.

தெலுங்கு திரையுலகில் தனித்துவமான நடிகராக பெயர் பெற்ற சரத் பாபு, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் தனது முத்திரையை பதித்தவர்.

1973-ம் ஆண்டு ‘ராம ராஜ்யம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சரத்பாபு, இதுவரை 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

1981, 1988, 1989 ஆகிய ஆண்டுகளில் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.

கண்ணேவயசு, திருமுல்ல பந்தம், சீதகோக சிலுகா, சம்சாரம் ஓகே சதரங்கம், அன்னய்யா, ஆபத்பாந்தவுடு என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Share.
Exit mobile version